Categories
உலக செய்திகள்

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த…. மதுபான ஆலை கண்டுபிடிப்பு…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்கள்….!!

பழமையான மதுபான ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் பழமைவாய்ந்த மதுபான ஆலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஆலையானது டெல் அவிவ் நகரின் தெற்கில் அமைந்துள்ள யாஃப் எனும் பகுதியில் ஆட்சி புரிந்த பைசன்டைன் மன்னர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலையில் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் இருந்து சாறு  பிழிவதற்கான ஐந்து கட்டுமானங்கள் மண்ணுக்கடியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.மேலும் ஒரு ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கபட்டுள்ளதாக கணித்துள்ளனர். இந்த ஒயின் மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றிய அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |