கன்னட திரை உலகின் மூத்த நடிகராக வலம் வந்தவர் லோஹிதாஸ்வா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆங்கில பேரறிஞராகவும் பணியாற்றியவர். மேலும் டிவி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு கடந்த அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே-அவுட்டில் உள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் லோஹிதாஸ்வா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது இறப்பிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து லோஹிதாஸ்வா உடல் குமரசாமி லே-அவுட்டில் உள்ள வீட்டில் இன்று காலை 7.30 மணிக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடத்த போவதாக அவரது மகன் சரத் தெரிவித்துள்ளார்.