Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பலமுறை மனு கொடுத்தேன்” மிரட்டல் விடுத்த தொழிலாளி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தில் கட்டிட தொழிலாளி விஸ்வநாதன் வசித்து வருகின்றார். இவர் தனது நிலத்திற்கு அனுபவ சான்று தரக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அனுபவ சான்று வழங்க வலியுறுத்தி அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஸ்வநாதனிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது அனுபவ சான்று வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக அதை வழங்க வேண்டும் என்று விஸ்வநாதன் வலியுறுத்தினார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் விஸ்வநாதனிடம் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து விஸ்வநாதன் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

Categories

Tech |