Categories
உலக செய்திகள்

பழங்கால பொருளுக்கு இவ்ளோ விலையா ….. வியாபாரிக்கு அடித்த ஜாக்பாட்….!!!

சப்பாத்திக்கள்ளி செடியை  விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

யூகே-வில் உள்ள நார்ஃபோல்க் நகரில் கேக்டஸ் என்ற சப்பாத்திக்கள்ளி செடிகளை சைமன் வார்ட் என்ற வியாபாரி விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய இரண்டு நண்பர்களான டிமோ மலகோரி மற்றும் டானி டாக்லியாஃபெரா ஆகியோருடன் இணைந்து சிம்ப்ளி கேக்டஸ் என்ற சப்பாத்திகள்ளி செடி விற்பனையை டாம்ப்லேண்டில் தொடங்கினார். இந்த சப்பாத்திகள்ளி செடியை  சிவப்பு நிற டெலிபோன் பூத்தில் அடுக்கி வைத்து  விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக இவருடைய நண்பர்கள் இருவரும் வியாபாரி சைமன் வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த பழைய சிவப்பு நிற டெலிபோன் பூத்தை  செடி விற்பனைக்கு பயன்படுத்தினர். சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் இந்த சிவப்பு நிற பெட்டியை பரிசோதனை செய்துள்ளார் .

இந்தப் பெட்டி ஒரு பழங்கால பொருள் என்றும் , இதனின் விலை பல லட்சங்கலாக  இருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த டெலிபோன் பூத்தை ஆன்லைனில் ஏலத்திற்கு விடப்பட்டு ஆரம்ப விலையாக   £35,000 அதாவது ரூபாய் 36 லட்சத்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் கூறும்போது, “இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது .தற்போது ஏலத்திற்கு வந்துள்ள இந்த டெலிபோன் பூத்தின் ஆரம்ப விலை £35,000 ஆக உள்ளது இதனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் குத்தகைக்கு எடுத்தேன்.இதனால் சப்பாத்திகள்ளி செடி விற்பனை பாதிக்கப்படுமோ என்று தோன்றுகிறது ” இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் வியாபாரி சைமன் தன்னுடைய டெலிபோன் பூத் விற்பனையால் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகிறார்.ஏனெனில் செடி விற்பனையில் இந்த டெலிபோன் பூத் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார் .மேலும் இந்த டெலிபோன் பூத்  வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .இவர் பயன்படுத்திய 2 தொலைபேசி  பெட்டியில் ஒன்று பல மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது, மற்றொன்று பெட்டி சாதாரணமானது.இந்த 2 பெட்டிகளில் ஒரு பெட்டி விற்கப்பட்டாலும்  தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும்  என்று செடி வியாபாரிகள் மூவரும் கவலைப்படுகின்றனர்.

Categories

Tech |