Categories
உலக செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக…. குடியேறிய பழங்குடியின மக்கள்…. குவைத் அரசின் நடவடிக்கை….!!

சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய பழங்குடியின மக்களை நாடற்றவர்கள் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.

குவைத் அரசு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவருக்கு பல்வேறு நலத்திட்டங்கள்  வழங்குகிறது. இந்த நிலையில் அந்த நாட்டிற்குள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை மட்டும் நாடற்றவர்களாக குவைத் அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக குடியேறிய Bedoun என்னும் பழங்குடியின மக்களின் வழியைச் சேர்ந்த 85,000 பேரை குவைத் அரசு நாடற்றவர்கள் என்று கூறியுள்ளது.

குறிப்பாக 1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் போதிய கல்வியறிவு இன்றியும் தேவையான ஆவணங்கள் இல்லாததினால் இந்தவகை பழங்குடியின மக்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிக்காமல் இருந்துள்ளனர். இதனால் தான் இவர்களின் சந்ததியினர் தற்பொழுது நாடற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

Categories

Tech |