Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” வரலாற்றில் முதல்முறை…. பழனி பக்தர்கள் வருத்தம்….!!

வரலாற்றில் முதன்முறையாக பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா பங்குனி உத்திர திருவிழா. வருகிற மார்ச் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று பொதுமக்களும் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். ஆனால் மேலும் கோவில் ஸ்தலங்களும் மூடப்பட்டு பூஜைகள் மட்டும் கடவுள்களுக்கு நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு நடைபெறாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகம விதிப்படி பூஜைகள் மட்டுமே நடைபெறும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கும் அனுமதி தராமல் இருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என பழனியில் வசித்து வரும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Categories

Tech |