சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட12,757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில் மட்டும் 14,802 பேர் கொரோனோவால் பாதிக்கப்படுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு கொரோனா பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 6 மண்டலங்களில் 1,000கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.