எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நாசமானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக எடப்பாடி தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வேளாண் துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் மத்திய அரசு தங்களுக்கு நீதி வழங்க வில்லை என்று காரணம் கூறாமல் சேதமடைந்த நெற்பயிருக்கு உடனடியாக மறு சாகுபடி செலவாக 12 ஆயிரம் ரூபாயும், ஹெக்டர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.