மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவை பின்வருமாறு,
* 2 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
* ஊரடகால் உணவு பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ரயில் மூலமாக பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க வேண்டும்.
* கொரோனா பதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி நிதி தேவைப்படுகிறது.
* அம்மா உணவகம் மூலம் 6 தத்தம் பேருக்கு உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
* ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது.
* மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்.
* வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
* மாஸ்க், வெண்டிலேட்டர் வாங்க ரூ.3,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.