Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு அதிகளவு பிசிஆர் பரிசோதனை கருவிகள் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்திற்கு பிசிஆர் பரிசோதனை கருவிகள் அதிகளவில் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சிறு, குறு தொழில்களுக்கு ஆறு மாதம் விலக்கு அளிக்க வேண்டும். உணவு தானியங்களை வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும். பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் மருத்துவ உபகாரணங்களுக்கான நிதி மற்றும்

உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் 50 சதவிகிதத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |