Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்போது விமான சேவையை தொடங்க வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்!!

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்கலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். நாடு முழுவதும், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது விமான சேவை வேண்டாம் என பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் வரும் 25ம் தேதி உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ள நிலையில், உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.

இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் அமர விமானத்தில் தனி இடத்தில் இருக்கை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் 2 மணி நேரத்திற்கு முன்னதாவே விமான நிலையத்திற்கு வர வேண்டும். உடன் எடுத்துவரும் 2 பைகளை தவிர வேறு சுமைகளை கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை அவர் வெளியிட்டார். மேலும், அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

பயணிகள் விமானத்தில் உட்கொள்ள தாங்களே உணவைக் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளார். நாடு முழுவதும் 7 தடங்களில் விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடத்தில் 40 நிமிடம், 2வது தடத்தில் 60 நிமிடம், 3வது தடத்தில் பயண நேரம் 90 நிமிடங்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4வது தடத்தில் 120 நிமிடம், 5-வது தடத்தில் பயண நேரம் 120 முதல் 150 நிமிடங்களாக இருக்கும்.

6வது தடத்தில் 150 முதல் 180 நிமிடங்கள், 7வது தடத்தில் 180 நிமிடத்தை விட அதிக பயண தூரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு விமான சேவையை ஜூன் மதத்திற்கு பிறகு தொடங்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |