Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற்கூரை ஓடுகள் கண்டெடுப்பு …!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 6_ ம் கட்டம் அகழ் ஆய்வு பணிகளில் தொன்மைக்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற் கூரை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் கடந்த மே மாதம் சிறிய விலைகளின் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவ்விடம் தொன்மைக்கால தமிழரின் தொழில் நகரமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து அங்கு மேலும் நான்கு குழிகள் தோண்டப்பட்டத்தில், மேற் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. நான்கு குழிகளிலும் ஒரே அளவு ஆழத்தில் சரிந்த நிலையில் மேற் கூரை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் அங்கு தூண் அமைக்கப்பட்டு இருந்ததற்கான ஆதாரமாக துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித நவீன வசதியும் இல்லாத காலத்தில், தமிழன் 30 அடி நீள அகலத்தில் கூரைகள் அமைத்து வாழ்ந்துள்ளான் என்பதற்கான ஆதாரம் இது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே 4_ ம் கட்ட  அகழ் ஆய்வில் சிறிய கூரைகள்  மற்றும் மழைநீர் வடிகால் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது 6_ ம் கட்ட அகழ் ஆய்வில் பெரிய அளவிலான மேற்கூரை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதன் அருகே உள்ள கொந்தகை என்ற இடத்தில் நேற்று மற்றமரு  முதுமக்கள் தாழியில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |