பலத்த சூறை காற்று வீசியதில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் தாண்டிக்குடி- வத்தலகுண்டு மலைப்பகுதியில் இருக்கும் மரம் சாலையின் குறுக்கே விழுந்துவிட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் அங்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.