பாலத்திற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், கணியூர், மடத்துக்குளம் போன்ற பகுதிகளுக்கு கோவை- திண்டுக்கல் சாலையில் இருந்து மைவாடி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அங்கு செல்லும் ஓடைக்கு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புகளோ, பக்கவாட்டு சுவரோ எதுவுமில்லை.
மேலும் பாலத்தின் ஓரத்தில் உள்ள சாலைப்பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அந்த குறுகலான பாலத்தில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்தப் பாலத்திற்கு பக்கவாட்டு சுவர் அல்லது தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.