பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17ஆம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு துணைத்தலைவர் டாக்டர் முகமது ரபிக் தலைமை தாங்க மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி ஷியாம் சுந்தரம் முன்னிலை வகித்தார்கள்.
இதை டீன் ரவிச்சந்திரன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள், பாராமெடிக்கல் மாணவ-மாணவிகள் என பலர் பங்கேற்று இது குறித்து முழக்கங்களையும் விழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்திய படி மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்தார்கள். மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.