ஆந்திராவில் மூன்று ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த சுனில் குமார் என்ற வாலிபர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் இடம் திருப்பதி ஏடிபி நிதி நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி சுகாசினி என்ற பின் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். மேலும் காதலிக்கும்போது சுகாசினி தனக்கு பெற்றோர்கள் யாரும் இல்லை எனவும் தான் ஒரு அனாதை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தனது பெற்றோரிடம் கூறி கடந்த டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.
சுனில்குமார் பெற்றோர்கள் சுகாசினிக்கு 3 சவரன் தங்க நகையை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதையடுத்து சில மாதங்கள் கழித்து தன்னை வளர்த்து வந்த மாமாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பணம் தேவை உள்ளது எனக்கூறி இரண்டு தவணைகளாக 6 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் 6 லட்சம் பணம் குறித்து சுனில் குமாரின் பெற்றோர்கள் கூறவே நடந்ததை கூறியுள்ளார். மாமாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிய சுகாசினி திரும்ப வரவே இல்லை. தொலைபேசியில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார்கள்.
அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் ஏமாந்ததை உணர்ந்த சுனில்குமார் அப்பெண்ணின் அடையாள அட்டையில் உள்ள முகவரியை வைத்து தேடியபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது .நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சுகாசினியே சுனில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
தான் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை திரும்பத் தருகிறேன் எனவும் கூறியுள்ளார். மீறி காவல்துறையிடம் சென்றால் பெரிய பிரச்சனை வரும் என மிரட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வெங்கடேஷை திருமணம் செய்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக வேறு ஒரு ஆணையும் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.