Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சொந்த பணத்தை செலவிடும் அரசு ஆசிரியர்கள்…. தமிழக அரசை குற்றம்சாட்டிய அன்புமணி….!!!!

தமிழகத்தில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இதுகுறித்து  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  ட்விட்டரில், “வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துக்கள், பாதிப்புகளை தொடங்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தை கொண்டு இந்த பணிகளை செய்கிறார்கள். அவ்வாறு செய்யப்படாத பள்ளிகளில் மழைக்காலத்தில் ஏதேனும் விபத்துக்கள் நடந்தால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்க்க வேண்டும். மேலும் மாணவ செல்வங்கள் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பள்ளி கல்வித்துறை அலட்சியம் செய்யக்கூடாது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை பள்ளி கல்வித்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும்'” என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |