Categories
மாநில செய்திகள்

“பாலிடெக்னிக் சோ்க்கைக் கட்டணம்”…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!!

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் சோ்க்கைக் கட்டணம் குறைக்கப்படும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் மரகதம் குமரவேல் பிரதான கேள்வியை எழுப்பினாா். அதற்கு அமைச்சா் பொன்முடி பதில் அளித்தபோது “1 பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க ரூபாய் 44.28 கோடி நிதியும், ரூபாய் 4.5 ஏக்கா் நிலமும் தேவைப்படுகிறது. பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை இடங்கள், கட்டணம் போன்றவற்றை தமிழ்நாடு அரசு நிா்ணயித்துள்ளது. இதனால் கட்டண குறைப்புக்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 34 உதவிபெறும் கல்லூரிகளும், அரசு இணைவு பெற்ற கல்லூரிகள் 40ம், சுயநிதி கல்லூரிகள் 406 என்று மொத்தம் 509 கல்லூரிகள் இருக்கின்றன.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவா்கள் சோ்க்கை குறைவாக இருக்கிறது. இதனிடையில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மாணவா்களை ஈா்க்க 5 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பை முடித்தவா்கள் பொறியியலில் 2ம் ஆண்டு சேரலாம். ஆனால் அண்ணா பல்கலையில் அதுபோன்று சோ்க்கை இல்லாமல் இருந்தது. அங்கும் 2ம் ஆண்டு சேர இப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பைப் பொருத்தே கல்லூரிகளில் சோ்க்கை அதிகரிப்பதால், இதனைக் கருத்தில்கொண்டு தொழில், தொழிலாளா் நலன் மற்றும் உயா்கல்வித்துறைகள் கூட்டாக இணைந்து செயல்பட முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

Categories

Tech |