Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மிச்சமான இட்லிகளில் இருந்து…. சுவையான இட்லி பக்கோடா…!

 

மாலை நேரத்தில்  தேநீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரொம்பவே சுவையான பழைய இட்லி பக்கோடா…!

 

தேவையான பொருட்கள் :

பழைய இட்லி – 4
கடலை மாவு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சோம்பு தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

நான்கு  பழைய இட்லியை நன்கு உதிர்த்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரை கப் அளவுக்கு கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, சோம்பு தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்,உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கையாலேயே அதிக அழுத்தம் கொடுக்காமல் நன்கு கலந்துகொள்ளலாம். தண்ணி சேர்க்கத் தேவையில்லை.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடான பிறகு பழைய இட்லி சேர்த்து கலந்து வைத்த பக்கோடா மாவை கொஞ்சமாக கையில் எடுத்து அதிகமாக அழுத்தம் கொடுக்காமல்  எண்ணெயில் போட்டு மூன்று நிமிஷத்துக்கு மிதமான தீயில் வேகவிடவும். பொன்னிறமானதும் எடுத்துவிடலாம்.இப்பொழுது சுவையான இட்லி பக்கோடா ரெடி…

Categories

Tech |