Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

ஜோலார்பேட்டை அருகில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டை பகுதியில் பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அந்த மாணவியை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இதனையடுத்து திருப்பத்தூர் அருகில் உள்ள சிவராஜ் பேட்டை பகுதியில் வசிக்கும்  அருண்பிரசாத் என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அருண்பிரசாத் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண் பிரசாத்தை போக்சோ கைது செய்ததோடு அந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.

Categories

Tech |