மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடர்பாக 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனந்தபாலம் பகுதியில் ஆல்டோ மைக்கிள் டோனிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்- 1 மாணவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாலிபர் காதலி மாணவியை உலக்கை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஆல்டோ மைக்கிள் டோனிக் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தியதில் ஆல்டோ மைக்கிள் டோனியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக ஆல்டோ மைக்கிள் டோனிக் நண்பர்களான கோட்டார் பகுதியைச் சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஷாக் ஆகிய 3 பேருக்கும் இதில் இருப்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களையும் கைது செய்து இதுதொடர்பாக 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.