Categories
உலக செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு…. போலீஸ் அதிகாரி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா லண்டனில் உள்ள Hertfordshire கவுண்ட்டியை சேர்ந்த Stevenage நகரத்தில் டேவிட் கேரிக் எனும் காவல் அதிகாரி கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவர் மெட் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு கட்டளையின் உறுப்பினராக இருக்கின்றார். இந்நிலையில் பெருநகர காவல்துறையில் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆன டேவிட் கேரிக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாக கிரவுண்ட் பிராசிக்யூஷன் சேவை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தது. கடந்த செப்டம்பர் 4, 2020 அன்று பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் டேவிட் கேரிக் கடந்த திங்களன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கான்ஸ்டபூலரியால் பிசி டேவிட் கேரிக் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நாளில் அவர் வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கமிஷனர் டேம் கிரெசிடா டிக் பேசியபோது “பாராளுமன்றம் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பு கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கடுமையான குற்றம் சாட்டப்பட்டுள்ள செய்தியை நான் கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். இதனால் பொதுமக்கள் மிகவும் கவலைபடுவார்கள் என்பதை நான் முழுமையாக அறிந்து கொள்வேன். இந்த கிரிமினல் வழக்கு அதன் போக்கில் இருக்கும். ஆகவே இந்த கட்டத்தில் என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

இதேபோன்று சாரா எவரார்ட் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்ததி, இந்த வழக்கில் குற்றவாளியான மெட்ரோபொலிட்டன் காவல் அதிகாரி Wayne Couzens-க்கு  ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு தண்டனை கொடுக்கப்பட்டாலும், பிரித்தானிய நகரங்களில் காவல்துறையினர் மீது பயம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை சரி செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |