Categories
தேசிய செய்திகள்

“சீச்சீ” 8 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட 16 வயது சிறுவன்… பஞ்சாயத்து குழு கொடுத்த வினோத தண்டனை….!!

உத்திரபிரதேசத்தில் 8 வயது சிறுவனை 16வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து குழுவினர் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.  சம்பவத்தன்று அந்த 8 வயது சிறுவனை 16 வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன் அருகிலுள்ள வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அவன் 8 வயது சிறுவனுடன் தவறான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். அதனால் சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளான்.

அப்போது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிறுவனை மீட்டுள்ளனர். பின்னர் சிறுவனை  அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 16 வயது சிறுவன் 8 வயது சிறுவனுக்கு உறவுக்காரன் என்பதால் சிறுவனின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க மறுத்துள்ளனர்.

ஆனால்  கிராம மக்கள் இதனை அப்படியே விடாமல் இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடிவு செய்தனர்.பின்னர் இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினரையும் பஞ்சாயத்து குழுவினர் அழைத்து  16 வயது சிறுவனுக்கு கன்னத்தில் நான்கு அடியும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

Categories

Tech |