அமெரிக்க நாட்டில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டு குதிரையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது .
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா நகரில் வேகமாக ஓடி வந்த குதிரை திடீரென்று எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்தக் குதிரை பள்ளத்தில் விழுந்த போது கான்கிரீட் சுவருக்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆரஞ்ச் கவுண்டிங் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்களின் உதவியோடு குதிரையை மீட்டெடுக்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த குதிரை மிக நெருக்கமான இடத்தில் சிக்கிக்கொண்டதால் அதனுடைய தலை மற்றும் கால் பகுதிகள் மாட்டிக்கொண்டது.
“One of the most technical horse rescues we have performed.” Our technical rescue team, air operations crew, and our FF’s responded to a horse in San Juan Capistrano that was stuck on its back- wedged between pieces of jagged concrete and exposed rebar. pic.twitter.com/1TFhO58SuU
— OCFA PIO (@OCFireAuthority) July 6, 2021
இதனால் மீட்பு குழுவினர் மிஷின்களின் உதவியுடன் அந்தப் பகுதியிலிருந்த இடர்பாடுகளை கலைத்து பின்பு ஹெலிகாப்டர் மூலம் அந்த குதிரையை பத்திரமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட குதிரைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்தக் குதிரை மீட்கப்பட்ட வீடியோவை ஆரஞ்ச் மீட்புப் படையினர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது ,”குதிரை ஒன்று பள்ளத்தில் விழுந்து சிக்கிக் கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.இதில் குதிரைக்கு காயம் ஏற்படாதவாறு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டோம் .மேலும் ஹெலிகாப்டர் மூலம் அந்த குதிரை மீட்கப்பட்டது. இது நாங்கள் மேற்கொண்டதில் மிகவும் சவாலான பணியாகும் “,என்று அவர் கூறினார் .