Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெள்ளிரவெளியிலிருந்து புளியம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமியம்பாளையம் தரைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றன.

இதனை அறியாத சந்தோஷ் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலைதடுமாறி பாலம் கட்ட தோன்றி இருந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சந்தோஷின் உடலை உடனடியாக மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |