புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியதில் 3 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் தவப்புத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக பொக்லைன் எயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது மூன்று கற்சிலைகள் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று சிலைகளையும் மீட்டு தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.