Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி சென்ற ஆசிரியர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி ஆசிரியர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா செட்டுகளை தயார் செய்து பர்னிச்சர் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்ட துணைத் தலைவராகவும் இருந்து வந்திருக்கிறார். இவர்களுக்கு விஜயகுமார், வசந்த், இந்திரஜித் என 3 மகன்கள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்திரா காலை நேரத்தில் நடைப் பயிற்சிக்கு சென்ற போது வழியில் இருக்கும் கோவில் குளத்தில் கைகால்களைக் அழுவதற்காக படியில் இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி குளத்திற்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |