பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் சென்று படுத்து தூங்கியுள்ளார்.
இதனை அடுத்து அவரின் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அக்கம்பக்கத்தினர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி உடனடியாக வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் பீரோவில் வைத்திருந்த 2 வெள்ளி கால் கொலுசு மற்றும் 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது பற்றி ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.