பள்ளியில் தனது மகளின் முடியை வெட்டிய ஆசிரியரிடம் தந்தை ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 7 வயது சிறுமியான Jurneeயின் முடியை ஆசிரியர் ஒருவர் வெட்டியுள்ளார். இதனையடுத்து Jurneeயின் தந்தையான ஹாஃப்மேயர் தனது மகளின் மீது உரிமைமீறல் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவமானது இன வேற்றுமை காரணமாக நான் நடந்துள்ளதாகவும் ஹாஃப்மேயர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மகளை பள்ளியில் இருந்து முழுவதுமாக வெளியேற்றியுள்ளார். இந்த சம்பவமானது மார்ச் மாதத்தில் நடந்துள்ளது.
இதனை தற்போது ஜூலையில் பள்ளி திறந்த பின்பு விசாரணை செய்துள்ளனர். அதில் சிறுமியின் முடியை வெட்டிய ஆசிரியை பள்ளியின் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முடியை வெட்டியதற்கு இன வேற்றுமை காரணமல்ல என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை தண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் பள்ளியில் தொடர்ந்து பணி புரிகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பள்ளியில் உள்ள சக மாணவர்கள் சிறுமியின் முடியை முதலில் வெட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மறுநாள் ஆசிரியை தனது மகளின் மற்றொரு பக்கத்தில் உள்ள முடியை வெட்டியுள்ளார் என்று ஹாஃப்மேயர் தெரிவித்துள்ளார். அதிலும் சிறுமியின் முடியை ஒழுங்குப்படுத்துவதற்காகவே ஆசிரியை வெட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்காக சிறுமியின் தந்தை ஹாஃப்மேயர் ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு தொகையாக கேட்டுள்ளார். இதனால் ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.