Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர்ரே டி என் பி எஸ் சி தேர்வுகள்…!!

பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்ட பின்னர் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கால அட்டவணைகள்  இடம் பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கொரோனா ஊராட்ங்கால் இன்னும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எனவே டி என் பி எஸ் சியின் தேர்வு கால அட்டவணையின்  எதிர்பார்த்து நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் காத்து இருக்கின்றனர். இந்நிலையில்  பள்ளி கல்லூரிகள் திறந்தால் தான் தேர்வுகளை நடத்த முடியும் என்றும். கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50 சதவீதம் தான் நிரப்ப முடியும் எனவும் அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

நடத்த இயலாத தேர்வுகள் அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் சேர்க்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முறைகேடுகள், மோசடிகள் நடைபெறுவதால், தற்போது டி என் பி எஸ் சி தேர்வின் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்கும் வகையிலும், தேர்வாணையத்திற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், மேலும் பழைய தேர்வுகளின் கேள்வித்தாள்களும்  இணையதளத்தில் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |