பள்ளிக் கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பிரித்தானியா தலைநகரான லண்டனில் Dulwich என்ற பகுதியில் துர்லோ பார்க் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இருக்கும் Rosemead Preparatory என்ற பள்ளியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இது குறித்து லண்டன் தீயணைப்பு குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “பள்ளியில் உள்ள இரண்டாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 பேர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து விபத்தில் படுகாயமடைந்த பலரை தீயணைப்பு குழுவினர் மீட்டு சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்ற கட்டிடங்களில் இருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு குழுவினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இருப்பினும் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் வேறு எவரும் இல்லை என்று தீயணைப்பு வீரர்கள் சோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக்குழுவினர் கருவிகள் கொண்டு கட்டிடத்தை சோதனை செய்து இடிந்து விழும் அபாயத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்” என வெளியிடப்பட்டுள்ளது.