Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களை தாக்கியதற்காக… குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள நெல்லுக்கட்டும்செவல் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சிங்கதுரை என்று ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிங்கதுரையை கைது செய்துள்ளனர். மேலும் சிங்கதுரையின் மீது மணல் கடத்தல் போன்ற 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் துணை சூப்பிரண்டு சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து சிங்கதுரை ஜாமினில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார். ஆகவே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டு என்றும் மாவட்ட ஆட்சியாளர் சமீரனிடம் பரிந்துரை செய்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர் சிங்க துரையை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்  நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிங்க துரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |