பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே விபத்தில் சிக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தானூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் மாணவன் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் விஜயபாஸ்கர் என்பவரை கைது செய்துள்ளனர்.