Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடித்து உதைத்த ஆசிரியர்…. வைரலாகும் வீடியோ…. ஆட்சியரின் உத்தரவு….!!

பள்ளி மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததால் ஊடரங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு வருகை தராமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்துள்ளது. இதனால் மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கின்ற சஞ்சய், சூரியா, நெக்டாபாலன், சந்துரு, அஜய்குமார், சுசீந்திரன் ஆகிய 6 மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் அந்த மாணவர்களை பள்ளியில் இருக்கும் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் அழைத்து கண்டித்துள்ளார். பின்னர் அவர்களை பிரம்பால் அடித்து உதைத்து முட்டி போட வைத்துள்ளார். அதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலமாக வீடியோ எடுத்துள்ளனர். இதை சமூக வலைதளங்களில் மாணவர்கள் பதிவிட்டதால் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்துள்ளனர். அதற்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சஞ்சயை தாக்கிய குற்றத்திற்காக ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |