பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய சரவணகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சரவணகுமாரின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அங்கிருந்தவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.