மன உளைச்சலில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்கவாடி நடுத்தெருவில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலைக்கும் அவரின் மனைவி பூங்கொடிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியதர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.