சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இதனை அறிந்த கடையின் உரிமையாளர் வாசுவை வேலை விட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின் வாசு கோவையில் இருக்கும் ஒரு கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வாசு மாணவியுடன் கோவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து வாசுவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் மாணவியை அவரின் பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.