மாணவியின் தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவிக்கு இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் 2 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து வாட்ஸப்பில் மிதுன் சக்கரவர்த்தி மாணவியிடம் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வரான மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் மீரா ஜாக்சனை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.