Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திறக்கப் போறாங்க…. பேருந்துகள் ஆய்வு…. ஆட்சியரின் செயல்….!!

பள்ளிகள் திறக்க போவதினால் பேருந்துகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் மூடப் பட்டிருந்தது. இதில் தற்போது தொற்று குறைந்து வருகின்ற காரணத்தினால் படிப்படியாக பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளிகள் செயல்படாத ஒன்றரை வருட காலத்தில் பள்ளிகளின் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் பாதுகாப்பு உறுதி திறன் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று இருக்கிறது. அதன்பின் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழாக 300 பேருந்துகளும் மற்றும் அரக்கோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழாக 150 பேருந்துகள் என மொத்தமாக 450 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை சிப்காட்டில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 100-க்கும் அதிகமான பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் பிரேக், இருக்கை, பாதுகாப்பு என பல அம்சங்களை ஆய்வு செய்து வாகனங்களில் பள்ளி பெயர்கள் மற்றும் பள்ளிப் பேருந்து கண்காணிப்பு அலுவலரின் செல்போன் எண்கள் பொறிக்கப்பட வேண்டும் எனவும், ஓட்டுநர்கள் இருக்கை தனியாகப் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். பின் பேருந்து தரைதளம் உறுதியாக இருக்க வேண்டும். பள்ளி பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் தடுப்புகள், பேருந்தின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் அனைத்தும் இருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். பின்னர் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது எனவும், இவை அனைத்தும் ஒவ்வொரு பேருந்துகளிலும் சரியாக இருப்பதை இருசக்கர வாகன ஆய்வாளர்கள் உறுதி செய்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இவற்றில் சிறிதேனும் குறைபாடு காணப்பட்டால் அனுமதி வழங்கக்கூடாது எனவும், அதை சரி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். அதற்கு பிறகு குழந்தைகளின் பாதுகாப்புக்கு எந்த வித பிரச்சினையும் இருக்கக்கூடாது என்றும், இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்கக்கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் பேருந்து இயக்கும் போது செல்போன் பேசக்கூடாது. பின்னர் வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் எனவும், விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாண- மாணவிகள் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வந்து செல்வதை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |