Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால வாழ முடியாது…. உதவியாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐங்கமசெட்டி தெருவில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த சக்ரவர்த்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |