பள்ளியில் வைத்து நடைபெற்ற பழங்கால நாணைய கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளியின் தலைவர் ரவி மற்றும் பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இவற்றில் பழங்கால நாணயங்கள் மற்றும் பல நாடுகளின் ரூபாய் நோட்டுகள், நூற்றாண்டு பழமையான கடிதங்கள் மற்றும் அஞ்சல் வில்லை உள்ளிட்ட அரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடுவதின் நோக்கத்தையும் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் புராதான சின்னங்களின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்து கொண்டுள்ளனர்.