ஆவூரில் பள்ளி மைதானத்திற்கு வேலி அமைத்துக் கொடுக்க காவல்துறையினர் போலீசார் எடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமானது கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மைதானம் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக இருப்பதனால் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் மைதானத்தை சுற்று சுவர் அமைத்து மது அருந்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மைதானத்தில் மாணவர்களுக்கு தேவையான உடற்கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியாகியது.
இதனையடுத்து வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத், அன்பழகன் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மைதானத்தை பார்வையிட்டு ஊராட்சிமன்ற நிர்வாகத்துடன் இணைந்து சம்பந்தப்பட்ட மைதானத்தை சுற்றி கம்பி வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பின் பள்ளியின் சுற்றி வெளியாட்கள் யாரும் மைதானத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு கம்பி வேலியை ஏற்படுத்தி, எச்சரிக்கை பலகையை காவல்துறையினர் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.