Categories
உலக செய்திகள்

பள்ளிகள் மீண்டும் திறப்பு… கட்டுப்பாடுகளை விதித்துள்ள இலங்கை அரசு…!!!

இலங்கையில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம் ஒரு சில பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் திரும்பவும் மூடப்பட்டன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா கூறுகையில், “200 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்து முன்புபோல் இயங்கலாம். 200 மாணவர்களுக்கு மேலான பள்ளிகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது மிக கடினம் என்ற காரணத்தால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வகுப்பிற்கு வரவேண்டுமென முடிவெடுத்து பள்ளிகள் செயல்படலாம். இருந்தாலும் பள்ளி உணவகம் திறப்பதற்கு அனுமதி கிடையாது” என்று அவர் கூறியுள்ளார். இலங்கையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,844 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் இருக்கின்றது.

Categories

Tech |