Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்…!!

பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இன்னிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு  குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு எடுப்பார் என்றார். பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர் தான் முக்கியம் என்ற அவர் எட்டு மாதங்களாக பூட்டப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார் படுத்தி வருகிறோம் என்றார்.

Categories

Tech |