பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தது குறித்து சிறுமி பேசும் காணொளியானது வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது தற்பொழுது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தலீபான்கள் தற்பொழுது பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுமி பேசும் காணொளி காட்சியை அந்நாட்டு ஊடகவியலாளரான பிலால் சர்வாரி வெளியிட்டுள்ளார்.
அதில் “பெண் கல்வியை பறிக்காதீர்கள். நான் மூன்று வேளையும் உணவு உண்டு வீட்டிலேயே இருப்பதற்காக பிறக்கவில்லை. நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட வேண்டும். மேலும் பெண் கல்வி இல்லாமல் ஒரு நாடு எவ்வாறு வளர முடியும்” என்று சிறுமி கேட்டுள்ளாள். இந்த சிறுமியின் வினாக்களுக்கு தலீபான்கள் விடையளிப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.