மஸ்ஜித் தவ்பா ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், கோட்டூர், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் மேலப்பாளையம் சந்தை அருகில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து மஸ்ஜித் தவ்பா ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதனையடுத்து அந்த சிறப்பு தொழுகையை மவுலவி மீரான் தாவூதி நடத்தினார். மேலும் இந்த சிறப்பு தொழுகையில் ஜமாத் தலைவர் இக்பால் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.