ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத்(48) என்பவர் இருந்து வருகிறார். இவர் உடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த்பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது.
அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருக் கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று சாயங்காலம் வழக்கம்போல பள்ளி முடிந்தவுடன் தனது ரூமுக்கு டீச்சரை அழைத்து சென்று தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது இதனை ஒரு மாணவன் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டார்.
அதே நேரம் மாணவன் வீடியோ எடுப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் வீடியோ எடுத்த மாணவனை ஆனந்த்பிரசாத் பிரம்பால் அடித்து தாக்கியுள்ளார். மேலும் மாணவனின் செல்போனை பிடுங்கி அதிலிருந்த வீடியோவையும் டெலிட் செய்து உள்ளார். ஆனால் அந்த மாணவன் ஆனந்த்பிரசாத் பார்ப்பதற்கு முன்பே வீடியோவை வாட்ஸ்அப்-ல் தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்து விட்டார்.
இதுகுறித்து அறிந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத்தை கைது செய்தனர். அத்துடன் தலைமை ஆசிரியரின் செயல் பற்றி கிருஷ்ணா மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். மேலும் ஆனந்த்பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து உள்ளனர்.