Categories
உலக செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பேரணி.. திடீரென்று நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலி ..!!

தென்மேற்கு பாகிஸ்தானில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது  குண்டுவெடித்ததில், 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள சாமன் என்ற நகரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேரணி நடந்துள்ளது. இதனை மதகுரு Maulana Abdul Qadir Luni என்பவர் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து மக்கள் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, திடீரென மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்திருக்கிறது. இதில் மதகுருவான Maulana உயிரிழந்துள்ளார். இவர் ஆப்கான் தலிபான்களின் ஆதரவாளர் ஆவார். மேலும் இச்சம்பவத்தில் ஆறு நபர்கள் பலியானதுடன், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |