பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் 1,200 வருடங்கள் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் படித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் 30 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வுக்கூட்டம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது.
இது பற்றி பள்ளி நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டதால், அதன்படி ஆபத்தான நிலையில் இருந்த ஆய்வுக்கூட கட்டிடம் முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவற்றை இம்மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.