Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் ரோடு பாலம்….. “35-வது வயதில் அடியெடுத்து வைப்பு….!!!!!!

பாம்பன் ரோடு பாலம் 34 வயதை கடந்து 35 வயதில் அடி எடுத்து வைத்துள்ளது.

ராமேஸ்வரம் மாவட்டத்திலுள்ள மண்டபத்துடன் ராமேஸ்வர தீவை இணைப்பதற்காக பாம்பன் கடல் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்திற்கும் அதனை ஒட்டி அமைந்த ரோடு பாலத்துக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. இந்த பாம்பன் ரோடு பாலத்தின் கட்டுமான பணியானது சென்ற 1973 ஆம் வருடம் 20 கோடி நிதியில் தொடங்கப்பட்டு 15 வருடங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்றது.

அதன் பின் 1988 ஆம் வருடம் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 2-ம் தேதி அன்று அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். இந்த ரோடு பாலம் தனது சேவையை தொடங்கி 34 வருடங்களைக் கடந்து 35 வது வருடத்தை தொடங்கியுள்ளது. தற்பொழுது பாம்பன் ரோடு பாலத்தை 16 கோடியில் சீரமைக்கும் பணிகளானது சென்ற எட்டு மாதத்திற்கு மேலாக நடந்து வருகின்றது. இந்த பணிகளை இன்னும் 8 மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |